கணினிச்சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது<< தெரியாத விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்,   தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். 

பைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட - computer hidden tricks and methods in tamil

நம் செயல்பாடுகளை எல்லாருக்கும் காட்டிக் கொண்டிருக்க முடியாது. நாம் கையாளும் தகவல்கள் பல நமக்கு 

computer hidden file tamil

மட்டுமே தெரிந்ததாக இருக்க வேண்டும் என பல நிலைகளில் நாம் முடிவெடுக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் நம் தகவல்களை எப்படி பாதுகாப்பாகப் பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

இது போன்ற மறைத்து வைக்க வேண்டிய செயலை மேற்கொள்ள பல சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது. 

எனவே விண்டோஸ் இயக்கம் தரும் பாதுகாப்பு வழியை இங்கு 
காணலாம்.இந்த செயலை மேற்கொள்ள நமக்கு கிடைக்கும் கட்டளை Attrib என்பதாகும். இந்த சொல் ஒரு பொருளுக்கு நாம் அமைக்கும் பண்பினைக் குறிக்கிறது. இங்கு ஒரு பைலுக்கு நாம் அளிக்கும் பண்பே அது. படிக்க மட்டும், மறைத்து வைக்க மற்றும் சிஸ்டம் பயன்படுத்த (Read only, Hidden and System attributes) என மூன்று வகைகளில் பொதுவாக பண்புகளை கொடுக்கலாம். கீழ்க்காணும் வழிகளில் செயல்பட்டு உங்கள் போல்டருக்கு இந்த பண்புகளை அளிக்கலாம். இதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும். இனி மறைக்க வேண்டிய தகவல் உள்ள பைல்களை அடைத்து வைக்க ஒரு புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.

எடுத்துக்காட்டாக D ட்ரைவில் Data என ஒரு போல்டரை உருவாக்கலாம். இதில் அனைத்து பைல்களையும் கொண்டு வரவும். மறைக் கப்பட வேண்டிய இந்த பைல்களுக்கு காப்பி பைல்கள் வேறு எங்கும் இருக்கக் கூடாது. பின் Start பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt) கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய போல்டரை மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக் காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் “attrib+s+h D:Data” என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக் கூடாது) இந்த கட்டளை உங்கள் Data போல்டரை D டிரைவில் மறைத்து வைத்திடும்.

உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை “Show hidden files and folders” என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. சரி, மறைத்து வைத்துவிட்டீர்கள். என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு நேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம். அல்லது மேலும் சில பைல்களை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த போல்டரில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது “attrib s h D:Data” என டைப் செய்திட வேண்டும்.


...
Web :

எக்ஸெல் பங்சனில் என்ன எழுத வேண்டும்? - EXCEL TIPS

நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இந்த சந்தேகம் எக்ஸெல் பயன்படுத்தும்போதெல்லாம் வரும். ஒரு எக்ஸெல் பங்சனில் என்ன ஆர்க்யுமெண்ட் எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கும். அதாவது = PMT( ) என்றால் அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் என்ன தர வேண்டும், அவற்றை எப்படித் தர வேண்டும் என்பது பல வேளைகளில் நினைவுக்கு வராது. ஆனால் இந்த பங்சன் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் நாம் இருப்போம்.

எனவே உள்ளே தரப்பட வேண்டிய ஆர்க்யுமென்ட்கள் எப்படி இருக்க வேண்டும் என Function Wizard சென்று பார்க்க முயற்சிப்பேன். அப்படி இருந்தும் கூட பல வேளைகளில் இந்த ஆர்க்யுமென்ட்களை தவறாகவே நான் தந்திருக்கிறேன். ஆனால் இந்த சுற்றுவழியெல்லாம் இல்லாமல் ஒரு சுருக்கு வழி உள்ளது. வழக்கம்போல பங்சன் பெயரெல்லாம் கொடுத்துவிட்டு Ctrl + Shift + A அழுத்தவும். எடுத்துக் காட்டாக கடன் செலுத்தும் தொகையைக் காண =PMT( ) என ஒரு பங்சன் அமைக்கும்போது இவ்வாறு கீ தொகுப்பு கொடுத்தால் உடனே = PMT(rate,nper,pv,fv, type ) எனக் கிடைக்கும். இந்த உதவியைக் கொண்டு நீங்கள் டேட்டா அல்லது எந்த செல்லில் இந்த டேட்டா இருக்கிறதோ அதனை அமைக்கலாம். அதன் பின் விஷயம் எளிதாகிவிடும்.


ஒர்க் ஷீட் டேப் கலர் செட் செய்யலாமா!எக்ஸெல் ஒர்க் ஷீட் டேப்களில் கலர் கொடுப்பதன் மூலம் ஒரே தன்மையிலான ஒர்க் ஷீட்களை நாம் அடையாளம் காண முடியும். எடுத்துக் காட் டாக ஸ்டேஷனரி, பல சரக்கு, செருப்பு மற்றும் ஷூ வகையறாக்களை விற்பனை செய்திடும் கடையில் உருவாக் கப்படும் வித்துமுதல் விற்பனை ஒர்க் ஷீட்களில் மேற்கண்ட ஒவ்வொரு வகைப் பொருளுக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கொடுப்பதன் மூலம் நாம் அவற்றை எளிமையாக அடையாளம் கண்டு இயக்க முடியும்.


1.முதலில் எந்த ஒர்க் ஷீட்டிற்கான வண்ணத்தை மாற்ற வேண்டுமோ அந்த டேபினைத் தேர்ந்தெடுத்து அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும்.


2.கிடைக்கும் பாப் அப் மெனுவில் டேப் கலர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Format Tab Color Box என்ற டயலாக் பாக்ஸ் கிடைக் கும்.


3. கிடைக்கும் பல வண்ண பாக்ஸில் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்.


4. ஏற்கனவே அந்த ஒர்க் ஷீட் டேபிற்கு ஒரு கலர் கொடுத்திருந்து அது வேண்டாம் என நீங்கள் எண்ணினால் Nணி இணிடூணிணூ என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். வேறு கலர் என்றால் அதனைத் தேர்ந் தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

...
Web :

எக்ஸெல் குறிப்பிட்ட சார்ட் வடிவைத் தொடர்ந்து பயன்படுத்த - excel shortcuts

எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட் ஒன்றில் அருமையான வடிவத்தில் சார்ட் ஒன்றை அமைக்கிறீர்கள். இது உங்களுக்குப் பிடித்துப் போவதால் அந்த வடிவத்தினையே தொடர்ந்து எப்போதும் சார்ட்களுக்குப் பயன்படுத்த திட்டமிடுகிறீர்கள். ஒவ்வொரு முறையும் அதனை அமைத்திடச் செலவிடும் நேரத்தை இதனால் மிச்சம் செய்திடலாம்.
மேலும் ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழகாக சார்ட் வடிவம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. எனவே இதனை உங்களுக்கான டிபால்ட் (மாறாதது) சார்ட்டாக அமைக்க வழியைத் தேடுகிறீர்கள். அதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திட வேண்டும்.
1. முதலில் உங்களுக்குப் பிடித்த அந்த சார்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.


2. பின் மெனுவிலிருந்து Chart –– அதன்பின் Chart Type தேர்ந்தெடுங்கள். இப்போது உங்களுக்கு Chart Type Dialogue பாக்ஸ் கிடைக்கும்.
3. இதில் கிடைக்கும் டேப்களில் Customs type டேப்பினை அழுத்தவும்.


4. பின் இதில் உள்ள User Defined ரேடியோ பட்டனை அழுத்தவும்.


5. அதன்பின் Add பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Add Custom Chart Type dilogue box கிடைக்கும். இதில் Name என்பதில் இதற்கான ஒரு பெயரை டைப் செய்திடவும். இதன் விளக்கத்தினை Description என்ற பெயரின் கீழ் டைப் செய்திடவும்.


5. இப்போது ஓகே பட்டன் கிளிக் செய்து மீண்டும் Chart Type Dialogue பாக்ஸ் வரவும். இந்த சார்ட் அமைப்பையே தொடர்ந்து நீங்கள் அடிப்படை அமைப்பாகப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் Set as Default Chart பட்டன் என்பதில் கிளிக் செய்திடவும்.


6. முடித்திட ஓகே பட்டன் கிளிக் செய்திடவும். இனி சார்ட் தயார் செய்திட நீங்கள் முயற்சிக்கையில் எந்த பெயரில் இதனை சேவ் செய்தீர்களோ அதனைத் திறந்து பயன்படுத்தி சார்ட் உருவாக்கலாம்.

...
Web :

தெரிந்து கொள்வோம்:கணனியில் இருந்து வரும் Beep ஒலி

கணனியில் ஒலிக்கும் Beep ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.

1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்

4 முறை பீப் சத்தம்:
Timer ல் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.

5 முறை பீப் சத்தம்:
Processer ல் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.6 முறை பீப் சத்தம்:
Keyboard, Keyboard Controlல் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.

7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள Jumpers சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.

8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.

11 முறை பீப் சத்தம்:
Cach Memory சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.

1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
Memory தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.

தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.

1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.

1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்

3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.

இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
...
Web :

C and C++ மொழிகளை ஆன்லைனில் கற்க சிறந்த இணையத்தளங்கள்...

2014-08-13 | புதன் | கணினிச்சோலை தமிழ் கம்ப்யூட்டர்

C and C++ மொழிகளை ஆன்லைனில் கற்க சிறந்த இணையத்தளங்கள்... 

 

பலருக்கு Computer Programming Language கற்க ஆசையாக இருக்கும். அந்த வகையில் இணையத்தில் பல பல தளங்கள் காணப்படுகிறது. ஆனால் அவற்றில் சிறந்ததைத் தேர்வு செய்வது மிகக் கடினமாகும். எனவே, இங்கே நான் பார்த்த வகையில் சிறந்த இணையத்தளங்கள் பற்றி கூறியுள்ளேன்.

 

C Language ஆனது யாருக்கு உதவுகிறதோ இல்லையோ, Computer Engineer களுக்கு அவசியமானது. சரி, தொடர்ந்து பார்க்கலாம்..1.Wibit.net - http://wibit.net/
இது தான் முதன் முதலாக C Language கற்க பல வசதிகளையும் உள்ளடக்கிய இணையத்தளமாகும். அதாவது, இங்கு வீடியோ டுட்டோரியல்ஸ் உள்ளது. இவற்றை நீங்கள் தரவிறக்கி கற்றுக்கொள்ளலாம், அல்லது PDF file ஆக நிறுவியும் கற்கலாம். அது உங்கள் விருப்பம். 


2.Cplusplus.com  -  Cplusplus.com

இத் தளத்தில் நீங்கள் PDF மூலம் தரவிறக்கியும் கறக்கலாம்... அல்லது அங்கு குறிப்பிடப்பட்ட பிரிக்கப்பட்ட பாடம், பாடமாகவும் கற்கலாம். மேலும், இங்கு Forum option உம் உள்ளது. அதாவது உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் வேறு பலருடனும் அது பற்றி கலந்து ஆலோசித்து அவர்களின் சிந்தனையை பரிமாறிக் கொள்ளலாம் 


3. Academictutorials.com - Academictutorials.comஇங்கு பல விதமான முறைகளில் பாடங்கள் பிரிக்கப்பட்டு காணப்படுகிறது. மேலும் இங்கு C++ Language பற்றி உதாரணங்கள் என்பவற்றுடன் தெளிவாக விளங்கக்கூடியதாக உள்ளது. 

இதைவிட, எவளவு தூரம் உங்களுக்கு இந்தப் பாடங்கள் பற்றி உங்களுக்கு விளங்கியுள்ளது என்பதை அறிய ஒரு Quiz மாதிரியான வடிவில் பரீட்சை காணப்படுகிறது. நீங்கள் அதன் மூலம் பயன் பெற்றுக்கொள்ளலாம்.

நிச்சயமாக இந்தத் தளம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.4. CProgramming.com  -  CProgramming.com

இங்கு, நீங்கள் C மற்றும் C++ பற்றிய சில டிப்ஸ் களை அறியலாம். இங்கும், Quiz வடிவிலான பரீட்சை முறை உள்ளது.மேலும் இதன் மூலம் உங்களுக்கு உங்கள் திறமையின் மூலம் வேலை பெறக் கூடிய வாய்ப்பையும் பெறலாம்.


...
Web :

குழந்தை அழுவதை அறிவிக்கும் அப்பிளிக்கேசன்

2014-08-13 | புதன் | கணினிச்சோலை தமிழ் கம்ப்யூட்டர்

குழந்தை அழுவதை அறிவிக்கும் அப்பிளிக்கேசன்

 

குழந்தைகளை கவனிக்க யாருமே இல்லாத பட்சத்தில் குழந்தை அழுதால் அறியத்தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் CRY GUARD.

 

                      

 

 

 

 

இந்த மென்பொருளை ஒரு கைபேசியில் நிறுவிக் கொண்டு மற்றொரு கைபேசியின் நம்பரை கொடுக்க வேண்டும்.

மென்பொருள் நிறுவிய கைபேசியை குழந்தையின் அருகில் வைத்து விடுங்கள். மற்றொரு கைபேசி உங்களிடம் இருக்க வேண்டும்.உங்களது குழந்தை அழுதாலோ அல்லது சிறு அசைவுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய கைபேசிக்கு அழைப்பு வரும்.

 

மென்பொருள் பதிவிறக்கம் செய்ய   http://cryguard.com/download.html

...
Web :

ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டம்:மைக்கிரோசாப்ட் அதிரடி!!!

2014-08-11| திங்கள் | கணினிச்சோலை தமிழ் கம்ப்யூட்டர்

ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டம்:மைக்கிரோசாப்ட் அதிரடி!!!


 

 

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை வெளியிட்ட போது, அதே கட்டமைப்பில் டேப்ளட் பி.சி. மற்றும் விண்டோஸ் மொபைல் போன்களுக்குமான சிஸ்டத்தினை வெளியிட்டது. இந்த நிலையின் அடுத்த கட்டமாக, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் ஆகிய அனைத்தும் இயங்குவதற்கு ஒரே இயங்கு தளத்தினை அமைக்க முயற்சித்து வருகிறது. இந்த வகையில், விண்டோஸ் போன், விண்டோஸ் ஆர்.டி மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே சிஸ்டமாக வடிவமைக்கப்படும்.

இந்த தகவலை மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்கள் மக்களிடம் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. இதனால், இந்நிறுவனத்தின் வருமானம் மிகக் குறையத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாகவும், தொழில் நுட்பத்தில் அடுத்த படியாகவும், இந்த புதிய முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கியுள்ளது.

வருமானக் குறைவினாலும், தங்கள் தயாரிப்பு பிரிவுகளை ஓர் ஒழுங்கமைதிக்குக் கொண்டு வரும் முயற்சியினாலும், ஏற்கனவே 18,000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் பணியிலிருந்து விலக்க முடிவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், பழைய முதல் நிலை மற்றும் வருமானப் பெருக்கத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைக் கொண்டு செல்லும் பொறுப்பினை இந்தியரான சத்யா நாதெள்ளா எதிர் கொண்டுள்ளார்.

அடுத்து வர இருக்கும் விண்டோஸ் 9 சிஸ்டம் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமையுமா என்பது இனித்தான் தெரிய வரும். தற்போது ஸ்மார்ட் போன்கள் மட்டுமே தொடு உணர் திரை இயக்கத்தினை முழுமையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அதே போல பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களும் மாற்றப்பட்டு, ஒரே இயக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைக்கப்படுமா? அல்லது இப்போது விண்டோஸ் 8 இயங்குவது போல, மவுஸ், கீ போர்ட் மற்றும் தொடுதிரை இயக்கத்தில் வர இருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்குமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.
 

...
Web :

Calender

February 2013
? ?
SMTWTFS
     12
3456789
10111213141516
17181920212223
2425262728  
       

News And Events

Cool  மேலும் தகவல்களுக்கு தேர்வுகள் பகுதியை பார்க்கவும்

Cool  ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்

Cool  மானிட்டர் வெளிச்சத்தை மாற்ற மென்பொருள்

Cool  ஸ்மார்ட்போன்களுக்கான Wireless Charger கண்டுபிடிப்பு

Cool  இலவச வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் Video Pad

Cool  எல்லாவித வீடியோக்களை பிளே செய்ய K-LiteCodec Pack

Cool   Autodesk Maya 2014 Full Version + Crack உடன் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

 

Addvertisement


Follow Us